Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 ஜூன் 28 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.ஹனீபா
சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையானது, கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைக்கப்பட மாட்டாது என, சுகாதாரப் பிரதி அமைச்சர் பைஷால் காஸீம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,' மக்கள் பயனடையும் வகையில், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையைத் தரம் உயர்த்தித் தருமாறு வைத்தியசாலை அபிவிருத்திக்குழு மற்றும் பள்ளிவாசல் பரிபாலனசபை உள்ளிட்டவை என்னிடம் கோரிக்கை விடுத்திருந்தன.
'இதற்கமைய, இந்த வைத்தியசாலையானது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் இணைந்த வகையில் என்பு முறிவு சிகிச்சைப் பிரிவு, எக்ஸ்கதிர் சோதனைப் பிரிவு, சத்திர சிகிச்சை நிலையம் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டதாக அபிவிருத்தி மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
'இதன் முதற்கட்டமாக அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி அவர்களின் சம்மதத்தைப் பெற்றேன். இதன் பின்னர் சுகாதார அமைச்சின் செயலாளர், பணிப்பாளர் நாயகம் ஆகியோருடனும் கலந்துரையாடி இது தொடர்பான சம்மதத்தைப் பெற்றேன். இந்நிலையில், மாகாண சுகாதாரப் பணிப்பாளருக்கு இது தொடர்பான உரிய அறிவுறுத்தல் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டிருந்தேன்.
'இதற்கிடையில், இந்தத் திட்டத்துக்கு சாய்ந்தமருது மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதாக அறியக் கிடைத்துள்ளது.
'எனவே, எனக்கு மூன்று தடவைகள் வாக்களித்த சாய்ந்தமருது மக்களின் விருப்பத்துக்கு எதிராக இந்த வைத்தியசாலை இணைப்பை மேற்கொள்வதில்லை என்று தீர்மானித்துள்ளதுடன், மேற்படி வைத்தியசாலைகளை இணைப்பதற்கான நடவடிக்கையை நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளேன்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025