Editorial / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.என்.எம். அப்ராஸ், அஸ்ஹர் இப்றாஹிம்
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை பீ தரத்திலிருந்து ஆதார வைத்தியசாலைக்கு அண்மித்த ஏ தரத்துக்கு தரமுயர்த்தப்பட்டுள்ளதெனத் தெரிவித்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் ஜீ.சுகுணன், இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையும் மிக விரைவில் நிரப்பப்படுமென்றார்.
மேற்படி வைத்தியசாலையில் புனரமைப்புச் செய்யப்பட்ட பெண்கள் விடுதி திறப்பு விழா, வைத்தியசாலை உத்தியோகத்தர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“வைத்தியத்துறையை இருவிதமாக பார்க்க முடியும். இங்கு பணியாற்றுபவர்களுக்கு இது வரமா அல்லது ஒரு சாபமா ஏனென்றால் மக்கள் ஏனையவர்கள் சுகாதார துறையில் இருக்கின்றவர்கள் ,வைத்திய அதிகாரிகள், உத்தியோத்தர்கள், ஊழியர்கள் அனைவரையும் அந்த நோயிலிருந்து விடுவித்துக் கொள்ளும் போது கடமைக்காகப் பார்ப்பார்கள்.
“ஆனால், அவர்களுக்கு தமது உயிர்களையும் திருப்பிக் கொடுக்கின்ற கடவுளாக அவர்களை வணங்குவார்கள். இந்த இடத்தில் வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத் துறையில் பணி புரிகின்றவர்கள் ஒரு வரத்தைப் பெற்றவர்களாகத்தான் நான் பார்க்கின்றேன்.
“இன்னொரு வகையில் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை முறையை பார்க்கின்ற போது ஒரு நல்ல நாள் கிடைப்பதில்லை , ஒரு சொந்த சுக துக்கங்களில் பங்கேற்க நேரம் கிடைப்பதில்லை,பிள்ளைகளைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு உணவுட்டுவதற்கு நேரம் கிடைப்பதில்லை.
“தாதி உத்தியோத்தர்களைப் பொறுத்தவரையில் காலை 7 மணிக்கு வைத்தியசாலையில்கடமை செய்யவேண்டி இருக்கின்றது.அந்த தறுணத்தில் பாடசாலைக்குப் பிள்ளைகளை அனுப்ப முடியாது. அவர்களுக்கு உணவை சரியாக சமைத்துக் கொடுக்க முடியாது.இப்படியாக தனிப்பட்ட வாழ்க்கையில் பல பிரழ்வுகளை சந்தித்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
“இந்த விடயத்தை பொறுத்தவரையில் நோயாளிகளுக்காக தம்மை அர்ப்பணம் செய்கின்ற அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்” என்றார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025