Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை பிராந்தியப் போக்குவரத்துப் பொலிஸார், இன்று (10) காலை முதல் மாலை வரை மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது, 35க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மேற்கொள்ளப்பட்டது.
இந்தத் திடீர் சோதனை நடவடிக்கை, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில், சம்மாந்துறை, காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, நிந்தவூர், சாய்ந்தமருது ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.
அம்பாறை, கல்முனை உள்ளிட்ட பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸ் பொறுப்பதிகாரிகளின் தலைமையில், முக்கிய சந்திகள், பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது சுமார் இரண்டு மணித்தியாலயத்தில் மாத்திரம் 35ஆக்கும் அதிகமான சாரதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதுடன், 70க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு எதிராக அபராதமும் விதிக்கப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையில், தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்மை, அதிக சத்தம் எழுப்பும் கோன் போன்ற பல்வேறு குற்றங்களுக்காகவே சாரதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago