Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 15 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
கல்முனை வடக்கு (தமிழ் ) உப பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இருவரும் ஒன்றிணைந்து அவர்களது பிரச்சினைகளை தாமே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியதுடன் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்கு மற்ற சிறுபான்மை இனம் தடைவிதிக்காமல் இருப்பதுதான் சாத்தியமென தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தபோதும், சிறுபான்மை இனத்தவர்கள் ஒன்றிணைத்தால் தான் அவர்களது பொதுவான பிரச்சினையை தீர்த்துக்கொள்ளமுடியுமெனவும் தெரிவித்தார்.
தமிழ் பேரவையின் இணைத்தலைவர்களின் ஒருவரான தம்பிப்போடி வசந்தராஜா கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் தொடர்பில் உள்ள இழுபறி குறித்துக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
கல்முனை பிரதேச மக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயரத்தப்பட்டு சேவையை செய்ய வேண்டும் என்பது தமிழ் மக்கள் பேரவையின் அவா. உண்மையிலேயே 1989 ஆம் ஆண்டு இலங்கையில் 28 உப பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட்ட போது கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் ஒன்று. ஆனால், 1993 ஆம் ஆண்டு இந்த 28 பிரதேச செயலகங்களும் தரமுயர்த்தப்பட்டதென கூறப்பட்டது.
கல்முனை விடயத்தில் ஒரு மாறுபட்ட காரியமாக இருப்பது மனவருத்தத்திற்குரிய விடயம். ஆகவே, இப்பிரச்சினைக்கு அனைவரும் ஒன்றிணைந்து அப்பிரதேச செயலகத்தை தரமுயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்கள் பேரவை பூரண ஆதரவாக அமையும்.அத்துடன் சிறுபான்மை மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி முன்வரும் இந்த பௌத்த மதத்தைச்சேர்ந்த பிக்குகள் தேரர்கள் ஆதரவு தெரிவிப்பது என்பது எவ்வளவு தூரம் சரி, பிழை என்பது எம்மால் தீர்மானிக்கமுடியாத விடயமாக அமைகின்றதென தமிழ் மக்கள் பேரவையில் இணைத்தலைவர் தம்பிப்போடி வசந்தராஜா தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago