Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 நவம்பர் 26 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் உள்ள புதிய அரசாங்கம் நல்ல செயற்பாடுகளையும், சிறுபான்மை சமூகங்களின் அபிலாசைகளை வெல்லக் கூடிய சிறந்த வெளிப்பாடுகளையும் முன்கொண்டு செல்லுமாயின், சிறுபான்மை சமூகங்களின் மனங்களை வெல்ல முடியுமென, கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனைப் பிரதேச மக்களுடன் இன்று (26) நடைபெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வரலாற்றுத் துரோகத்தால், அக்கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தோல்வியடைந்தது மட்டுமல்லாது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துச் செயற்பட்ட தமிழ் பேசும் சமூகங்களும் அதிர்ச்சியில் உள்ளனர்” என்றார்.
“ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் பேசும் சமூகங்கள் செயற்பட்டுள்ளன. ஜனநாயக ரீதியில் எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையை எமக்கு விரும்பிய வேட்பாளருக்காக வழங்கியுள்ளோம்.
“எதிர்காலத்தில் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நமக்கான உச்ச அளவில் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களைப் பெற்று, எமது பலத்தை மீண்டும் உலகறியச் செய்து காட்டுவதற்கு அனைவரும் உறுதி பூணவேண்டும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .