Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 03 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
மதம், மொழி வேறுபாடுகளுக்கு அப்பால், சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்தார்.
கல்முனை கல்வி வலயத்துக்குட்பட்ட பெரியநீலாவணை புலவர்மணி சரிபுதீன் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எம்.எம். முஹம்மட் நியாஸ் தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, வகுப்பறை கட்டடத்தைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே, இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும் போது, சிறுவர்களுக்கு மகிழ்சிகரமான கற்பித்தல் செயற்பாடுகள் பாடசாலை மட்டத்தில் நடைபெற வேண்டுமென வலியுத்தியதுடன், சிறுவர்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கமும் கிழக்கு மாகாண சபையும் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன எனத் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் முன்னெருகாலம் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்லமுடியாத அச்சம் நிறைந்த காலம் காணப்பட்டதாகவும் ஆனால், இன்று சுதந்திரமாக சென்றுவரமுடிகிறதாகவும் தெரிவித்த ஆளுநர், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக சிதைவடைந்து காணப்பட்ட கிழக்கு மாகாணத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அர்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றார்.
22 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
1 hours ago
1 hours ago