2025 மே 05, திங்கட்கிழமை

சிறுவர் இல்லத்தில் ஆறு சிறுவர்களுக்கு கொரோனா

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 08 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா

சம்மாந்துறை சுகாதாரவைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட சிறுவர் இல்லம் ஒன்றில் முகாமையாளர் மற்றும் ஆறு சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த சிறுவர் இல்லத்தில் 10 சிறுவர்களே இருந்துள்ளனர். அந்நிலையில், அங்கு பணிபுரியும் காரைதீவைச் சேர்ந்த இல்ல மேற்பார்வையாளருக்கு நேற்று முன்தினம் காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து, அவர் அன்டிஜன் சோதனை செய்துகொண்டார்.

இன்போது, அவருக்கு கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்டது. அதனையடுத்து சுகாதாரத் துறையினர், அவரை அட்டாளைச்சேனை ஆயுர்வேத கொவிட் வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

நேற்று (07)  சிறுவர் இல்லத்துக்குச் சென்ற சுகாதாரத் துறையினர், அங்குள்ள 10 சிறுவர்களுக்கு மற்றும் சமைக்கும் பெண் ஆகியோருக்கு அன்டிஜன் சோதனை செய்தபோது, ஆறு சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் டொக்டர் குண.சுகுணனின் உத்தரவின்பேரில், மேற்படி சிறுவர் இல்லத்தை முடி, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

10 நாள்களின் பின்னர் மீண்டும் அன்டிஜன் சோதனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X