Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரீ.கே.றஹ்மத்துல்லா / 2019 டிசெம்பர் 23 , பி.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு சாதகமான, சுற்றுநிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், குறிப்பிட்ட சில அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என, அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தின் தலைவர் ஏ.ஜி.முபாறக் தெரிவித்தார்.
அனைத்து முகாமைத்துவ உதவியாளர்கள் தொழிற் சங்கத்தால், அம்பாறை, பாலமுனையில், இன்று(23) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள் விடயத்தில், அமைச்சரவைத் தீர்மானத்துக்கமைய வெளியிடப்படுகின்ற இச்சுற்றுநிருபங்கள், வர்த்தமானி அறிவித்தல்கள், தாபனவிதிக் கோவையின் சரத்துகள், குறிப்பிட்ட சில அதிகாரிகளினால் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
“கிழக்கு மாகாணத்தில் அவைகளை உதாசீனப்படுத்தி, சர்வதிகாரமான முறையில் அரச சேவைக்கான தாபன விதிக் கோவையின் சரத்துகள் திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
“இச்சுற்றுநிருபங்கள் நடைமுறைப்படுத்தப்படாததால், முகாமைத்துவச் சேவை உத்தியோகத்தர்கள், தங்களின் தொழில் உரிமைகளை இழந்து, அகௌரவப்படுத்தப்பட்டு, மனஉளைச்சலுடனும் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
“எனவே, இப்பிரச்சினைகளுக்கு, ஒட்டுமொத்தத் தீர்வையும், புதிய ஜனாதிபதி, புதிய ஆளுநர், புதிய பிரதம செயலாளர் பெற்றுத்தர வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago