2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிவருத்ர யாகம்

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.மோகனதாஸ்

உலக நன்மை கருதி, சிவருத்ர மகா யாகம் மண்டூர் பாலமுனை ஆத்ம ஞானபீடத்தில், நாளை (21) பிற்பகல் 05.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

ஆன்மீகக் குரு ஸ்ரீ எஸ்.புண்ணியரெத்தினம் சுவாமிகள் தலைமையிலான இந்நிகழ்வில், இந்தியாவில் இருந்து சித்தர்கள், மகரிஷிகளின் ஆசியுடன் தருவிக்கப்பட்ட சக்திவாய்ந்த 108 மூலிகைள் இடப்பட்டு, மாபெரும் சிவருத்ரயாகம் ஆரம்பமாகவுள்ளது. 

சப்தரிஷிகள், பதினெட்டுச் சித்தர்களை ஆவாகனம் செய்து நிறைகுடங்கள் வைக்கப்பட்டு, பாதபூசையும் நடைபெறவுள்ளது.

இன்று உலகை ஆட்டிப்படைக்கும் நோய்ப்பிணி, பசிப்பிணிகளில் இருந்து மக்களையும் நாட்டையும் காப்பதற்காகவே இந்த மகா யாகம் நடத்தப்படுவதாக, ஆன்மீகக் குரு புண்ணியரெத்தினம் சுவாமிகள் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X