2025 மே 12, திங்கட்கிழமை

‘சீரோ ஆகமாட்டார் ஹீரோ ஆகுவார்’

ரீ.கே.றஹ்மத்துல்லா   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

“முஸ்லிம் காங்கிரஸில் இணைந்துகொண்டால் எதுவுமில்லாமல் ‘சீரோ’ ஆகிவிடுவீர்கள் என்று சிலர் உதுமாலெப்பையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அவர் இங்கிருந்தவோறே ‘ஹீரோ’ ஆகுவார். அதேபோல், சாய்ந்தமருது உள்ளூராட்சி சபை தொடர்பில் கட்சித் தலைமை மீதிருக்கின்ற நம்பிக்கை வீண்போக மாட்டாது” என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேசிய காங்கிரஸின் இணை ஸ்தாபகரும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் ஆகியோர், தங்களது ஆதரவாளர்கள் சகிதம்,) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீள இணைந்துகொண்டனர்.

இந்த நிகழ்வு, தாருஸ்ஸலாமில் நேற்று (16) நடைபெற்றபோதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் ஹக்கீம், “இந்த மீளிணைவானது, தனி மனிதனை விடுத்து, சமூகத்தைப் பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகும். கட்சியில் இருக்கின்றவர்களைப் பலவீனப்படுத்தாமலும், புதிதாக வருபவர்களை மலினப்படுத்தாமலும் செயற்பாடுகளைப் பகிர்ந்துகொண்டு ஒருமித்துப் பயணிக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, “நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற காலகட்டத்தில், அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் சக்தியைப் பலப்படுத்தும் நோக்கில் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் நாங்கள் இணைந்திருக்கின்றோம். எதிர்வரும் காலத்தில் கட்சித் தலைமைக்கு விசுவாசமாக இருந்து புதியதொரு யுகம் படைப்போம்” என, எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X