2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு; கருத்துகள் வரவேற்பு

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 14 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்று தொடக்கம்  கோமாரி வரையான கரையோர எல்லையில் கனிய மணல் அகழ்தல் தொடர்பான  சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை பொதுமக்களின் கருத்துகளை பெற்றுக்கொள்வதற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக, திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ. கஜேந்திரன், இன்று (14) தெரிவித்தார்.

கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமை திணைக்களத்துக்குக் கையளிக்கப்பட்டுள்ள குறித்த அறிக்கை, திருக்கோவில் பிரதேச செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது அமைப்புகள் பிரதேச செயலகத்துக்கு வருகை தந்து கருத்துகளை அவ்விடத்தில் பதிவிடும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமெனவும் இவ்விடயமாக பிரதேச செயலகத்தின் முன்னரங்க சேவை நிலையத்தில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட பிரிவுக்கு காலை 08.30 தொடக்கம் மாலை 04.15 வரை வருகை தருவதன் மூலம் பரிசீலனைக்கு உட்படத்த முடியுமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, நீலாவணை முதல் பொத்துவில் வரை கடலரிப்புப்பினால் பெரும் பகுதியான நிலம் மற்றும் கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கனிய மண் அகழ்வு திட்டமும் இப்பிரதேசத்தில் மேற்கொள்கின்ற போது, பெருமளவான பாதிப்புக்கள் இப்பிரதேசத்தில் ஏற்படுமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .