2025 மே 12, திங்கட்கிழமை

‘சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கவும்’

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தில் சுவீகரிக்கப்பட்டுள்ள பொன்னன்வெளி கண்ட விவசாயக் காணிகளுக்கு மாற்றுக் காணி, நஷ்டஈடு வழங்குமாறு, பாதிக்கப்பட்டுள்ள காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளால் இன்று (08) அனுப்பி வைக்கப்பட்டுள்ள மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலுவில், பொன்னன்வெளி கண்ட முஸ்லிம்களுக்குச் சொந்தமான 200 ஏக்கர் காணி கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் பெரும்பான்மை இனத்தவர்களால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 75 குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இக்காணியை இழந்தவர்களுக்கு மாற்றுக் காணி வழங்குவதற்கு ஒலுவில் பாலையடிவட்டை பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டு காணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டும் இவை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாரம்பரியமாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்த விவசாயக் காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த மக்கள் சுவீகரித்து இன்று விவசாயம் செய்து வருகின்றார்கள். இக்காணிகளுக்கு மாற்றுக் காணி வழங்குமாறு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, சுவீகரிக்கப்பட்டுள்ள காணிகளுக்கு, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாற்றுக் காணியோ அல்லது நட்டஈடோ வழங்க வேண்டுமென, அம்மகஜரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X