Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் வீட்டுக் கழிவு நீரை அகற்றி சுகாதாரத்துக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் வாடிகானுக்குள் விடுத்த குற்றச்சாட்டின் பேரில், நேற்றுக் கைதுசெய்யப்பட்ட இருவரை, எதிர்வரும் 16ஆம் திகதி சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டுக் கழிவு நீரை மிகவும் சூசியமான முறையில் வடிகானுக்குள் அகற்றியதால் அப் பிரதேசத்தில் துர்நாற்றம் விசி வருவதாக, பொது மக்கள் செய்த முறைப்பாட்டையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும், கழிவு நீரை அகற்றிய குழாய் மற்றும் உபகரணங்களைக் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
10 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago