2025 மே 22, வியாழக்கிழமை

செயலமர்வும் கௌரவிக்கும் நிகழ்வும்

Niroshini   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

மாவட்ட மீனவ பேரவை ஏற்பாடு செய்துள்ள இலங்கை பிரஜைகளின் உரிமைகள் மற்றும் பெண்களின் உரிமைகள் தொடர்பான செயலமர்வும் மக்கள் பணியாற்றிய சமூக சேவையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வும் எதிர்வரும் 18ஆம் திகதி காலை 9 மணிக்கு அட்டாளைச்சேனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் கூட்ட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன் தலைமையில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பிரபல சட்டத்தரணி ஜகநாதன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கவுள்ளார்.

இங்கு மாவட்ட மீனவ பேரவை மற்றும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஊடாக மக்கள் சேவையாற்றிய சமூக சேவையாளர்கள் பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

 தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் அண்டனி ஜேசுதாஸ், லவினா ஹஸன், பிரியங்கர கொஸ்தா, மாவட்ட மீனவ பேரவையின் தலைவர் கே.இஸ்ஸதீன், கள உத்தியோகத்தர் கே.கோகுலன் மற்றும் தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எஸ்.எம்.அறூஸ் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி பாராட்டிக் கௌரவிக்கப்படவுள்ளனர்.

மாவட்ட மீனவ பேரவை அமைப்பு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு சமூகப் பணிகளை நமது பிராந்தியத்தில் இன,மத வேறுபாடின்றி ஆற்றிவருகின்றது.

மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கான தீர்வுத் திட்டங்களை பெற்றுக் கொடுத்திருப்பதுடன், அறிவு சார் பல்வேறு செயலமர்வுகளையும் நடத்தியுள்ளது.

மக்களுக்கான சரியான தீர்வுகளுக்காக பல்வேறுபட்ட போராட்டங்களையும் கண்டனங்களையும் களத்தில் இறங்கி செய்து வருகின்ற ஒரு அமைப்பாக இன்று மாவட்ட மீனவ பேரவை பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X