2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

செயலமர்வு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 30 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளிகளில்  கடமையாற்றுகின்ற ஆசிரியர்கள் மற்றும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றுகின்ற சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களுக்கும் விழிப்புணர்வூட்டும் செயலமர்வு வியாழக்கிழமை காலை 9 மணி முதல்    அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அனுசரiணையுடன் நடத்தப்படும் இச்செயலமர்வின்போது, சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படும் வழிமுறைகள், சிறுவர் அபிவிருத்தி, சிறுவர் உரிமைகள் மீறப்படும்போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக பாலர் பாடசாலைப் பணியகத்தின் அம்பாறை மாவட்டச் செயலாற்றுப் பணிப்பாளர் எம்.கே.எம்.சுபைர், செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இவ்வாறான செயலமர்வு அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப் பிரிவுகளிலும் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X