2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதுத் தோணா புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கிகாரம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, கல்முனை மாநகரசபைப் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருதுத் தோணாவின்; புனரமைப்புத் திட்டத்துக்கு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் 16 கோடி 20 இலட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்வதற்கு அங்கிகாரம் கிடைத்துள்ளதாக மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எம்.நிஸாம் காரியப்பர், இன்று திங்கட்கிழமை தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை (11) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது, இத்திட்டம் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சமர்ப்பித்திருந்தார். இந்நிலையிலேயே இத்தோணாவின் புனரமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டுக்கு அங்கிகாரம் கிடைத்துள்ளது. இந்நிலையில், இத்தோணாவின் புனரமைப்பு வேலை,  எதிர்வரும் 23ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

மழைக்காலத்தல் காரைதீவு முதல் சாய்ந்தமருதுப் பிரதேசம்வரையான பகுதிகளில்; வெள்ளநீரை இத்தோணா உள்வாங்கிக் கடலுக்குச் செலுத்தி வருகின்றது. இத்தோணாவில் சல்பீனியாக்கள் வளர்ந்து காணப்படுவதுடன், துர்நாற்றமும் வீசுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X