2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு

Freelancer   / 2025 மே 18 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, ஹபரண வீதியில் கல்வங்கு பிரதேசத்தில் நேற்று (17) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரியான் மலிந்த  என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இரத்தினபுரியில் இருந்து கந்தளாய் நோக்கி பயணித்த போதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த நபர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகொரலவின் ஊடகச் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X