2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சாய்ந்தமருதில் அரச வர்த்தகக் கூட்டுத்தாபனக் கிளை

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் அம்பாறை மாவட்டத்துக்கான கிளை நிறுவனம், சாய்ந்தமருது நகரில் நாளை வெள்ளிக்கிழமை மாலை 05 மணியளவில் திறந்துவைக்கப்படவுள்ளது.

இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவருமான ஏ.எம்.ஜெமீல் தலைமையில் நடைபெறவுள்ள இத்திறப்பு விழாவில், கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு இக்கிளை நிறுவனத்தை திறந்துவைக்கவுள்ளார்.

இத்திறப்பு விழாவைத் தொடர்ந்து சாய்ந்தமருது பிரதான வீதி வளாகத்தில் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவரின் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஏ.எல்.ஜஹான் தெரிவித்தார்.

நாட்டின் வர்த்தகத்துறையில் முன்னணி நிறுவனமாகத் திகழ்கின்ற அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் 08ஆவது கிளை நிறுவனமே சாய்ந்தமருதில் திறக்கப்படவுள்ளது எனவும்; இது கிழக்கு மாகாணத்தில் நிறுவப்படும்  முதலாவது கிளை நிறுவனமாகும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .