2025 ஜூலை 03, வியாழக்கிழமை

சீருடை வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சி.அன்சார்

தேசமானிய இர்ஷாத் ஏ. காதர் நற்பணி பேரவையின் ஏற்பாட்டில் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேசத்தில் வறியகோட்டுக்குட்பட்ட மத்ரசா மாணவர்களுக்கு இலவசமாக சீருடைகள் வழங்கும் வைபவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை ஸ்டார் அகதியா பாடசாலையில் அதன் அதிபர் எம்.ஐ. உவைஸ் தலைமையில் நடைபெற்றது.

இவ்வைபவத்தில், இர்ஷாத் ஏ. காதர் நற்பணி பேரவையின் ஸ்தாபகர் தேசமானிய இர்ஷாத் ஏ. காதர், பேரவையின் தலைவர் பிறை எப்.எம் இன் சிரேஷ்ட அறிவிப்பாளரும் நிகழ்ச்சி தயாரிப்பாளருமான யுனிஸ் கே. ரஹ்மான், செயலாளர் சம்மாந்துறை வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. முஸ்டாக் அலி, ஆசிரியர் சீ.எம். தௌபீக் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .