2025 ஜூலை 02, புதன்கிழமை

சுற்றாடலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 08 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அட்டாளைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருப்போருக்கு எதிராகச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு  தனது பணிமனை உத்தியோகஸ்தர்களுக்குப் பணித்துள்ளதாக அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் கடுமையான எச்சரிக்கை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அண்மையில் பெய்த மழையைத் தொடர்ந்து, சில பிரதேசங்களில் டெங்கு நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர்,  டெங்கு நோயால் ஐந்து பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், காய்ச்சல் ஏற்படுமாயின், தாமதிக்காது  வைத்தியசாலையை  நாடுமாறும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .