Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 24 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
வி.சுகிர்தகுமார்
அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த அரச உத்தியோகத்தர்களும் சிவில் பாதுகாப்புக்குழுக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் தெரிவித்தார்.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் நேற்று (23) இடம்பெற்ற ஆலையடிவேம்பு பிரதேச சிவில் பாதுகாப்புக்குழுக்களுக்கான இரண்டாவது தெளிவூட்டல் நிகழ்வில், தலைமை உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'குற்றச் செயல்களை தடுப்பதற்காக அரச உத்தியோகத்தர்களும் சிவில் பாதுகாப்புக்குழுக்களின் உறுப்பினர்களும் இணைந்து செயற்படவேண்டிய தேவைப்பாடுகள் உள்ளது.
ஆலையடிவேம்பு பிரதேச சிவில் பாதுகாப்புக்குழுக்களின் செயற்பாடுகள் மூலம் பொலிஸாருக்கும், பொதுமக்களுக்கும் ஏற்பட்டுள்ள சுமூக உறவு காரணமாக ஆலையடிவேம்பு பிரதேசத்தில் குற்றச் செயல்களும் சட்டவிரோத செயற்பாடுகளும் கணிசமான அளவு குறைவடைந்துள்ளது.
சிவில் பாதுகாப்புக்குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தும் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள் மற்றும் அடையாள அட்டைகளைப் பாவித்து சட்டவிரோத செயற்பாடுகள் சிலவற்றுக்குப் பக்கபலமாகச் செயற்படுவோரின் அங்கத்துவத்தை இரத்துச்செய்து புதியவர்களை இணைத்துக்கொள்ள வேண்டும்' என குறிப்பிட்டார்.
மேலும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களை தனியாகக் கையாளும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் இயங்கிவருகின்ற பெண் பொலிஸாரைக் கொண்ட விசேட பிரிவின் செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமறித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
02 Jul 2025