Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 15 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
கடந்த வருடம் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகம் இடம்பெற்ற மாவட்டங்களாக கம்பஹா, கொழும்பு, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்கள் பதிவாகியுள்ளதாகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் வரவு - செலவுத் திட்டத்தின் மூலம் 100 மில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துவருவதாகவும் சாய்ந்தமருது சமூக வைத்திய நிலைய வைத்தியர் எம்.ஜே.எம்.ஹஸ்ஸான், இன்று திங்கட்கிழமை (15) தெரிவித்தார்.
'சிறுவர்களைப் பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி முஸ்லிம் அமைப்பு நிறுவனங்களினால் நடத்தப்படும் அநாதைப் பிள்ளைகளின் தாய்மார்களுக்கான கருத்தரங்கு, அட்டாளைச்சேனையில் இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
'நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு 10,732 முறைப்பாடுகளும் 2014ஆம் ஆண்டில் 10,315 முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது.
'இவ்வாறான சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்கும் நோக்கில் பல திட்டங்களை முன்வைத்து இன்றைய அரசாங்கமும், இஸ்லாமிய ரிலீப் மற்றும் எம்.எப்.சி.டி ஆகிய அமைப்புகளும் பல திட்டங்களை முன்வைத்து நாடளாவிய ரீதியில் பல கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன.
'சிறுவர்களின் தாய்மார்களுக்கு துஷ்பிரயோகம் தொடர்பான தெளிவூட்டலை வழங்குவதன் மூலம் இவ்வாறான துஷ்பிரயோங்களைக் குறைக்க முடியும்.
சிறுவர் துஷ்பிரயோகத்துக்கு எதிராக மிகக் கடுமையான சட்ட நடவடிக்கைககளை நடைமுறைப்படுத்தப்படுகின்றபோதுதான் இக் குற்றங்கள் குறைவடையச் சாத்தியம் இருக்கின்றது' என்றார்.
33 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago