2025 ஜூலை 02, புதன்கிழமை

சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

Niroshini   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜி.ஏ.கபூர்

தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை முதலியன இணைந்து அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தின் உதவியுடன் நடத்திய சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்கு மீராவோடை மாநகர பூங்காவில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

அக்கரைப்பற்றுப் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லெத்தீப் தலைமையில் தேசத்தின் குழந்தைகளை உயிரைப் போல் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் உளநல வைத்தியர் டொக்கடர் எம்.ஜே.எம்.நௌபல், வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காஸீம், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,சிறுவர் பாதுகாப்பு சம்பந்தமாக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஜனாபா ஏ.கரீமா, பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.டெலினா மற்றும் அரச சார்பற்ற நிறுவன செயற்றிட்ட உத்தியோகத்தர் எம்.சுபைதா ஆகியோர்களுடனான தொலைக்காட்சிக்கான நேர்காணல் இடம்பெற்றது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அறிவிப்பாளர் ஏ.நயீம் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .