2025 மே 12, திங்கட்கிழமை

ஜனாதிபதித் தேர்தலுக்கான முறைப்பாட்டுப் பிரிவு ஸ்தாபிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2019 ஒக்டோபர் 09 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பிரதேச ரீதியாக முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு அம்பாறை மாவட்டத்தில் பிரதேச செயலகங்களில் தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஏ.எம். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை, கல்முனை தமிழ் பிரிவு, அம்பாறை, பதியத்தலாவ ஆகிய பிரதேச செயலகங்களிலேயே, தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக, கூறினார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் சட்ட விதிகளை மீறுதல், வன்முறையைத் தூண்டுதல், தேர்தல் தொடர்பாக அரச ஊழியர்கள், பொது மக்களைத் தூண்டுதல், அன்பளிப்புகளை வழங்குதல் போன்ற முறைப்பாடுகளை தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவில் தெரிவிக்கலாமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X