Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 10 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எல்.எம்.ஷினாஸ்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேலைத்திட்டங்கள், நாட்டுக்கு மிகவும் அவசியமானதென, திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம தெரிவித்தார்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், கல்முனை வடக்கு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளைக் கையளிக்கும் நிகழ்வு, கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில், நேற்று (09) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, முன்பள்ளி ஆசிரியர்களிடத்தில் குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளைக் கையளித்து உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நாட்டுக்கும் நாட்டுமக்களுக்கும் பயனுள்ள பல வேலைத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.
பாடசாலை மாணவர் சமூகத்தைப் பாதுகாப்பதன் அவசியம் பற்றி ஜனாதிபதி உறுதியாகச் செயற்பட்டார் எனவும் அதனாலேயே, போதைப்பொருள் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை வழங்குவதற்கும் தீர்மானித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், இதனை சில சுயநலவாத அரசியல் சிந்தனையுள்ளவர்கள் எதிர்த்து, விமர்சனமும் செய்தார்கள் என்றும் போதையற்ற இலங்கையை உருவாக்க வேண்டும் என்பதற்காக ஜனாதிபதி பயணித்தார் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், “கிராமசக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக, கிராம மட்டத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டன எனவும் தேசிய பாதுகாப்பு, சூழல் பாதுகாப்பு, போசாக்கு போன்ற பல்வேறு வேலைத்திட்டங்களை ஜனாதிபதி வழங்கி வருகிறார் எனவும், சிறியானி எம்.பி தெரிவித்தார்.
41 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
51 minute ago
54 minute ago