Editorial / 2020 ஜூன் 11 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா, பாறுக் ஷிஹான்
கிழக்கு மாகாண தமிழ் மக்களின் காணிகளை சூட்சுமமாகச் சுவீகரிக்கும் ஜனாதிபதி செயலணிக்கு எதிராக, காரைதீவு பிரதேச சபையில் கண்டன பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேற்படி செயலணியில், தமிழ்பேசும் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்படாமை குறித்தும் கண்டனத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
காரைதீவு பிரதேச சபையின் 28ஆவது மாதாந்த அமர்வு, தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில், இன்று (11) கூடியபோதே, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாளிகைக்காடு சுயேச்சை உறுப்பினர் ஏ.ஆர்.எம்.பஸ்மீர் பிரேரணையைச் சமர்பித்துரையாற்றுகையில், கிழக்கில் 248 ஏக்கர் காணியை, தொல்பொருள் என்ற ரீதியில் அபகரித்து, பௌத்த பூமியாக்க சதி நடக்கிறதெனத் தெரிவித்தார்.
இறுதியில் இப்பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கிழக்கு மாகாணத்தின் தொல்பொருள்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரட்ண தலைமையில், ஜனாதிபதி செயலணி உருவாக்கப்பட்டமைக்கு தமிழர் தரப்பில் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
44 minute ago
52 minute ago
2 hours ago