2025 மே 12, திங்கட்கிழமை

’ஜனாதிபதி முறையை ஒழிக்கும் தரப்பினரை ஆதரிக்கக் கூடாது’

Editorial   / 2019 ஒக்டோபர் 02 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஆஷிப்

சிறுபான்மைச் சமூகங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் போன்றமைந்துள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முற்படும் தரப்பினரை, சிறுபான்மை மக்கள் ஆதரிக்கக் கூடாதென, கல்முனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தேசகீர்த்தி ஏ.அப்துல் கபூர் தெரிவித்தார்.

அதிகாரங்களையும் பதவிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக சர்வதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றி, நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க முற்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவித்தலை, தேர்தல் ஆணையாளர் வெளியிட்ட பின்னர், ஒரு சிலரின் குறுகிய அரசியல் இலாபத்துக்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை ஒழிப்பதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை தோல்வியடைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இறுதி நேரத்தில் தனது அதிகாரங்களையும் பதவிகளையும் பாதுகாத்துக் கொள்வதற்காக சர்வதிகாரமுடைய ஜனாதிபதி முறையை மாற்றி, நாட்டின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்க முற்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதாகக் கூறியே முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க, மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஆட்சிக்கு வந்தனர் எனச் சுட்டிக்காட்டியுள்ளதுடன், அவர்கள் ஜனாதிபதியான பின்னர் வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதியாக ஆட்சி புரிந்தவர்கள் மூலமாக தாம் சார்ந்த சமூகங்களுக்காக சில முக்கிய விடயங்களை, சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்களாக இருந்த அஷ்ரப், தொண்டமான் போன்றவர்கள் சாதித்துள்ளார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X