2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

ஜனாஸா எரிப்புக்கு எதிரான கவனயீர்ப்பு

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 24 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளையின்  ஏற்பாட்டில், கவனயீர்ப்பு பேரணியொன்று, அம்பாறை - சாய்ந்தமருது அல் ஹிலால் பாடசாலைக்கு அருகாமையில் இன்று (24) மதியம் முன்னெடுக்கப்பட்டது. 

பள்ளிவாசலில்  ஆரம்பிக்கப்பட்ட பேரணி, பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில், பிரதான வீதிக்கு சென்றடைந்து, பின்னர் முடிவுறுத்தப்பட்டது.

இதில்  ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் சாய்ந்தமருது கிளை செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டதுடன், இக்கவனயீர்ப்பில் ஜனாஸா எரிப்புக்கு எதிரான வாசகங்கள் மும்மொழிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

அவ்வாசகங்களில்  “நிபுணத்துவர்களா, இல்லை பழி தீர்க்கும் காடையர்களா?”, “புதைக்க வழி இல்லை என ஏமாற்றாதே”, “முஸ்லிம், கிறிஸ்தவ மக்களின் உரிமையை வழங்குங்கள்”, “பிஞ்சுக் குழந்தையை தீயில் கருக்கியது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா” போன்றவை குறிப்பிடப்பட்டிருந்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .