Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான், எம்.என்.எம்.அப்ராஸ்
டெங்குத் தடுப்பு உதவியாளர்கள், நிரந்திர நியமனம் கோரி, போராட்டமொன்றை இன்று (30) காலை முன்னெடுத்தனர்.
அம்பாறை - கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை முன்னால் ஒன்று கூடிய உதவியாளர்கள், தம்மை நிரந்திர சேவைக்குள் உள்ளீர்க்குமாறு, பல்வேறு சுலோகங்களை ஏந்தி, இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கல்முனை பிராந்தியத்தைச் சேர்ந்த டெங்குத் தடுப்பு உதவியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இரண்டரை வருடங்களாக, தமது நியாயமான கோரிக்கைகளை எந்தத் தரப்பினரும் கருத்தில் எடுக்கவில்லை எனவும் தற்காலிகமாக முன்னெடுக்கப்படும் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்க முயன்றால் இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் டெங்கு ஒழிப்புத் திட்டங்கள் பாதிக்கப்படுமெனவும், போராட்டத்தில் ஈடுபட்டோர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தனர்.
40 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
53 minute ago