Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 22 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவக் கூடிய அபாயம் காணப்படுவதால் பொது மக்கள் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை துப்பரவு செய்யுமாறு அட்டாளைச்சேனை சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்மாயில் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர், இன்று (22) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால், அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் இடங்களை வைத்திருப்பவர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தென்னம் குரும்பை, யோகட் கோப்பை, வெற்று போத்தல்கள், வெற்று டயர்கள், பொலித்தீன் கழிவுகள் போன்ற கழிவுகளை முறையாக அகற்ற வேண்டும்.
சுற்றுப்புறத்தில் தேங்கும் நீர் நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல், நீர்தேங்கியுள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன நுளம்புகளின் பெருக்கத்தைத் தடுக்கின்றது.
ஒரு வாரத்துக்கு ஒரு தடவையாவது சுற்றுப் புறச் சூழலை கண்கானிப்பதோடு வீதிகளிலோ, பொது இடங்களிலோ பிறர் மூலம் சேர்க்கப்பட்ட டெங்கு நுளம்பு பெருகும் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும்.
டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் வெற்றுக் காணிகளை வைத்திருப்பவர்கள் காணிகளை துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறும் பட்சத்தில், நீதிமன்றினூடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்மாயில் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .