2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

டொக்டர் பறூஸாவின் சேவை இரு தசாப்தங்களை கடந்துள்ளது

Princiya Dixci   / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

1999ஆம் ஆண்டு, அரச மருத்துவச் சேவையில் இணைந்து கொண்டதிலிருந்து, 21 வருடகாலம் இச்சேவையில் பல்வேறுபட்ட பதவி நிலைகளைக் கடந்து, வினைத்திறன்மிக்க தனது சேவையில் இரு தசாப்தங்களைக் கடந்துள்ள வைத்தியர் திருமதி பறூஸா நக்பர், மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவருகின்றார்.

அக்கரைப்பற்றில் பிறந்த இவர், தனது மருத்துவக் கல்வியை முடித்துக்கொண்டு, வைத்திய உத்தியோகத்தராக முதல் நியமனத்தை, நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 1999ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.   

பின்னர், அம்பாறை மாவட்டத்தின் பாலமுனை மாவட்ட வைத்தியசாலையில் 2000ஆம் ஆண்டு பொறுப்பு வைத்திய உத்தியோகத்தராக பதவியேற்றார். 2002ஆம் ஆண்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றிய இவர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக 2006ஆம் ஆண்டு பொறுப்பேற்று, 9 வருடங்கள் கடமையாற்றினார். 

இதன்பின்னர் நிந்தவூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக பொறுப்பேற்று 2 வருடங்களும் இறுதியாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியாக 5 வருடங்களும் சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையில்  தொடர்ச்சியாக 15 வருடங்கள் சேவையாற்றி, இத்துறையில் சிறந்த அனுபவத்தையும் ஆற்றலையும் பெற்று மக்கள் பணியை சிறப்புற வழங்கியுள்ளார்.

இவரது சேவைக் காலப்பகுயில், நோய் பரவல், தொற்று நோய் போன்ற பல்வேறு பட்ட நோய்களின் சவால்களுக்கு முகங்கொடுத்த போது அவற்றைத் திறன்படச் செயற்பட்டு, அனைத்தையும் வெற்றிகொண்டார். 

டொக்டர் பறுஸா நக்பர், எதிர்வரும் 2021 ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் வருடாந்த இடமாற்ற கட்டளைக்கு அமைவாக, நிந்தவூர் பிரதேசத்துக்கான சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .