Editorial / 2019 நவம்பர் 28 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்
இலங்கை பௌதீகவியல் நிறுவனம், நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய “பிசிக்ஸ் ஒலிம்பியாட்” போட்டி நிகழ்ச்சியில் திறமை காட்டி வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கௌவித்து பரிசளிக்கும் வைபவம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் புதிய கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது, தங்கப்பதக்கம் வென்ற அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் கால்தீன் முகம்மது சப்னாஸ் என்ற மாணவரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு, கல்லூரி வளாகத்தில் இன்று (28) நடைபெற்றது.
அதிபர் மௌலவி யூ.எல்.மன்சூர் தங்கப்பதக்கம் வென்ற மாணவருக்கு பதக்கம் அணிவித்து, சான்றிதழ் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்கள், வலயத் தலைவர்கள், மாணவரின் தந்தை எம்.சி.கால்தீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026