Princiya Dixci / 2021 பெப்ரவரி 22 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
அம்பாறை, சம்மாந்துறையில் திண்மக் கழிவகற்றல் சேவையின் போது, ஒரு வீட்டின் குப்பைப் பொதியினுள் தவறுதலாக வீசப்பட்ட 12 பவுண் தங்க நகைகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கடந்த 20ஆம் திகதி, சம்மாந்துறை சின்னப்பள்ளி வீதியில் குறித்த வீட்டு உரிமையாளர் தனது வீட்டில் திருமண நிகழ்வு நடைபெற்றமையால் 12 பவுண் தங்க நகைகளை தன்னையரியாமல் குப்பையோடு குப்பையாக கழிவுப் பொதிக்குள் வீசியுள்ளார்.
அப்பொதி, சம்மாந்துறை பிரதேச சபையின் கழிவகற்றல் வாகனத்துக்கு வழங்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வீட்டில் இருந்த நகையை தேடிய வேளையில் காணாமல் போயிருப்பது கண்டறிப்பட்டதை தொடர்ந்து, இவ்விடயம் சம்மாந்துறை பிரதேச சபை திண்மக்கழிவகற்றல் சேவை மேற்பார்வையாளரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை தொடாந்து சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட்டின் பணிபுரைக்கமைவாக உடனடியாக செயற்பட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் வங்களாவடி சேதனைப் பசளை உற்பத்தி நிலையத்தில் ஊழியர்களின் உதவியுடன் குறித்த திண்மக்கழிவகற்றல் வாகனத்தில் சேகரிக்கப்பட்டிருந்த அனைத்து கழிவுக்குப்பைப் பொதிகளையும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் ஆராய்ந்து, 12 பவுண்தங்க நகைகளைத் தேடிக்கண்டு பிடித்து, உரிய நபரிடம் நேற்று (21) ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறாக நகை, பணம், பெறுமதியான பொருட்கள் குப்பைகளுக்குள் வீசப்பட்ட நிலையில் பின்னர் உரிமையாளிடம் ஒப்படைந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025