2025 மே 12, திங்கட்கிழமை

தனியார் பஸ் விபத்து; 12 பேர் படுகாயம்

எஸ்.கார்த்திகேசு   / 2019 ஒக்டோபர் 06 , பி.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்டியடி, தங்கவேலாயுதபுரம் சந்தியில் இன்று (06) காலை தனியார் பஸ்ஸொன்று, கனரக வாகத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியதில் 12 பேர் படுகாயமடைந்துள்ளனரென, பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் நகரில் இருந்து கல்முனை நகர் நோக்கிப் பயணித்த தனியார் பஸ், தங்கவேலாயுதபுரம் சந்தியில், கருங்கள் ஏற்றிய நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகத்தின் பின்புறமாக மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கனரக வாகத்தில் பின்புற டயர் வெடித்த நிலையில் நிறுத்தி வைக்கப்பபட்டிருந்த நிலையில்,  பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்து ஏற்பட்டமையால் பஸ்ஸின் முன்பகுதி பாரியளவில் சேதமடைந்துள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள், திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு, அங்கிருந்து இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை, திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X