Suganthini Ratnam / 2017 ஜூன் 12 , பி.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சபேசன்
“நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், மிகவும் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பதுடன், அம்மக்களின் இருப்புக் கேள்விக்குறியாகி உள்ளது” என, கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்தார்.
“எமது கலை, கலாசாரம், பண்பாடு ஆகியன, திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுவதுடன், அவற்றைக் கட்டிக் காக்க வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்” எனவும் அவர் கூறினார்.
துறைநீலாவணை கண்ணகி அம்மன் பக்திப் பாமாலை இறுவெட்டு வெளியீட்டு விழா, அக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை (11) இரவு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியபோது, “கல்லோயாக் குடியேற்றக் கிரமங்களுக்குத் தாய்க் கிராமமாக இருக்கும் துறைநீலாவணைக் கிராமமானது, கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், எங்கள் மத்தியில் ஒற்றுமை, மிகக் குறைவாக இருக்கின்றது.
“எந்த விடயமாக இருந்தாலும், துறைநீலாவணைக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதுடன், அனைவரும் முன்னின்று ஒற்றுமையை ஏற்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும்.
“சமூக முன்னேற்றத்துக்காக உதவ முன்வர வேண்டும். அப்போதே, பாதிக்கப்பட்டுள்ள தமிழ்ச் சமூகத்தைக் காப்பாற்ற முடியும்” என்றார்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025