Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
காணி, அபிவிருத்தி, தொழில், பாதுகாப்பு எனப் பல்வேறு கோணங்களில் தமிழர் மீதான யுத்தம் தொடர்வதாக, காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
380ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற பொத்துவில் கனகர் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் முன்னிலையில் கருத்துத் தெரிவிக்கும் போதே, இவர் இவ்வாறு தெரிவித்தார்.
போராட்டக் கொட்டிலில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, தவிசாளருடன் உறுப்பினர்களான த.மோகனதாஸ், சி.ஜெயராணி, பிரியன் ஆகியோரும் உடனிருந்தனர்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த தவிசாளர் ஜெயசிறில், நாம் வாழ்ந்த பூர்வீகக் காணியை மீட்க ஒரு வருடம் கடந்தும் போராடவேண்டியுள்ளதாகவும் இரு வாரங்களில் தீர்வு, இரு மாதங்களில் தீர்வு என்கின்றார்களே தவிர எதுவுமே நடப்பதாகத் தெரியவில்லை எனத் தெரிவித்ததுடன், அங்குள்ள மக்கள் வைராக்கியத்துடன் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
அத்துடன், சட்டத்துக்கு முன் யாவரும் சமன் என்கிறார்கள். காணியை மீட்க ஏனைய இனங்கள் போராடினால் ஓர் இரவுக்குள் தீர்வு வந்துவிடும். ஆனால், தமிழ் மக்களுக்கு மட்டும் இது வருடக்கணக்கில் போராடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யுத்தம் நடந்த காலப்பகுதியை விட யுத்தம் மௌனித்த இந்தக் காலகட்டத்தில்தான் கூடுதலான அடக்குமுறைகளும் புறக்கணிப்புகளும் இழுத்தடிப்புகளும் இடம்பெறுகின்றன எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பும் கானல்நீராகிவிடுமோ என்று அஞ்சவேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.
35 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
2 hours ago