Editorial / 2020 மே 15 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
“சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. இவருக்கு வடக்கு, கிழக்கில் நடந்த படுகொலைகளைப் போராட்டமும் தியாகங்களும் தெரியாது” என, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்தானர்.
கல்முனையில் நேற்று முன்தினம் (13) ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “சுமந்திரன் அரசியலில் உறுதியானவராக நான் கருதுவதில்லை. ஏனென்றால், வட, கிழக்கில் தமிழ் மக்கள் பட்ட கஷ்டங்கள், அவர்கள் மீது திணிக்கப்பட்ட படுகொலைகள் பற்றி அறிந்திராதவர் என்பதை தற்போது வெளிக்காட்டியுள்ளார்.
“சுமந்திரனுக்கு தமிழ் மக்களுக்கும் இடையே எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சம்பந்தருக்கும் இவருக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அது என்னவெனில், தேர்தல் காலங்களில் நிதி கையாடல்களை மேற்கொள்ள தான் சம்பந்தன் ஐயா, கூட்டமைப்பிலிருந்து தூக்கி எறியாமல் சுமந்திரவை வைத்திருக்கின்றார்” என்றார்.
12 minute ago
19 minute ago
48 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
48 minute ago
57 minute ago