Princiya Dixci / 2021 ஒக்டோபர் 07 , பி.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கிழக்கு மாகாணத்தில், தரம் 1 தொடக்கம் 5 வரையான வகுப்புகளைக் கொண்ட 200 மாணவர்களுக்குட்பட்ட 588 பாடசாலைகள் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி என்.பிள்ளைநாயகம், இன்று (07) தெரிவித்தார்.
இதன்படி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் 423 தமிழ் மொழி மூல பாடசாலைகளும் 165 சிங்கள மொழி மூல பாடசாலைகளையும் எதிர்வரும் 21 ஆம் திகதி திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கமைய, பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதோடு, பாடசாலை வளாகம் முழுமையாக துப்புரவு செய்யப்பட்ட பின்னர், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் மேற்பார்வையில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
39 minute ago
49 minute ago
58 minute ago