2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

தம்பிலுவில் பகுதியில் ஆணின் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2020 நவம்பர் 10 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கார்த்திகேசு

அம்பாறை - திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 57 வயதுடைய ஆணொருவர், இன்று (10) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என, திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர், தம்பிலுவில் 01 பகுதியைச் சேர்ந்தவர் என்றும் அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் தாதி உத்தியோகத்தராகக் கடமை புரிந்து வருகின்றவர் என்றும் அவரது மூன்று பிள்ளைகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகள் ஊடாகத் தெரியவந்துள்ளன. 

தனது தென்னம் தோட்டக் காணிக்குச் சென்றுள்ள இவர், வீடு திரும்பாத நிலையில் அத்தோட்டக் காணியில் உள்ள சிறிய நீர் தேங்கிய மடு ஒன்றினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .