Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மீது சுமத்தப்பட்டுள்ள அபாண்டப் பழியைக் கண்டிப்பதாகத் தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ், இவர் மீது பெரும்பான்மை மக்கள் வைத்துள்ள நன்மதிப்பை இல்லாமல் செய்வதே எம்மவரின் நோக்கமாகும் எனவும் தெரிவித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் மேலும் தெரிவிக்கையில்:
சஹ்ரான் ஒரு பயங்கரவாதியாக அறியப்படாதிருந்த நேரமது. தேர்தல் காலத்தில் காத்தான்குடி முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து, கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம் விசாரிக்கச் சென்ற நேரத்திலான வீடியோக் காட்சியிலுள்ள சஹ்ரானைக் கொண்டு அவருடன் தொடர்வுபட்டவர் பயங்கரவாதத்துக்கு துணை போனவர் என சித்தரிக்க முனைந்திருப்பதானது காட்டிக்கொடுக்கும் செயலாகும்.
இன்று சஹ்ரானைச் சந்தித்ததாக முறைப்பாடு செய்திருப் பவர்கள், அவ்வாறு சந்தித்தது குற்றமென்றால் ஏனைய தரப்புகளை விட்டுவிட்டு ஒருவருக்கெதிராக மட்டும் ஏன் முறைப்பாடு செய்ததானது தேர்தலை இலக்காக வைத்தே செய்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள வாக்குகளால் பெற்றிபெற வேண்டும் என்ற நிரலுக்குள் எம்மவர்கள் விலை போயுள்ளதையே தலைவர் ஹக்கீமுக்கு எதிரான முறைப்பாடு காட்டுகின்றது. இச்செயற்பாட்டினை நாம் முறியடிப்போம் என்றார்.
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago