2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

தள்ளு வண்டிகளில் திண்மக்கழிவகற்றல் சேவை முன்னெடுப்பு

Princiya Dixci   / 2022 மார்ச் 15 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்லம் எஸ்.மெளலானா

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை (16) தொடக்கம் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளதால், சமயலறைக் கழிவுகளில் துர்நாற்றம் வீசக்கூடிய குப்பைகளை மாத்திரம் இத்தள்ளு வண்டிகளில் ஒப்படைத்து, முழுமையாக ஒத்துழைப்பு வழங்குமாறு, பொதுமக்களிடம் கல்முனை மாநகர சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது விடயமாக மாநகர மேயரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

“நாட்டில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு மத்தியிலும் பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்த போதிலும் கல்முனை மாநகர சபையானது இருபதுக்கு மேற்பட்ட திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் மூலம் கழிவகற்றல் சேவையை முன்னெடுத்து வந்துள்ளது.

“எனினும், கடந்த சில நாள்களாக மாநகர சபையின் இவ்வாகனங்களுக்குத் தேவையானளவு டீசலைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

“எனவே, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபின் அறிவுறுத்தலின் பேரில், அவசர மாற்று ஏற்பாடாக நாளை 16ஆம் திகதி தொடக்கம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட 06 வலயங்களிலும் 24 தள்ளு வண்டிகளைக் கொண்டு, சமயலறைக் கழிவுகளை, அதிலும் துர்நாற்றம் ஏற்படக்கூடிய கழிவுகளை மாத்திரம் சேகரித்து, அகற்றுவதற்கு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.

“இதன்படி உக்கும் கழிவுகளாயினும் உக்காத கழிவுகளாயினும் துர்நாற்றம் ஏற்படாத குப்பைகள் அனைத்தையும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்படும் வரை பொதுமக்கள் தமது வீடுகளிலேயே வைத்து, முகாமை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .