2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

திடீர் சோதனை; 117 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 24 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக அம்பாறை பிராந்தியத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட மாவட்ட  விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இந்தத் திடீர் சோதனை நடவடிக்கையானது, சம்மாந்துறை புறநகரப்பகுதி, கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி, தாளவட்டுவான் சந்தி, பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில் நேற்றும் (23) இன்றும் (24) காலை முதல் மதியம் வரை முன்னெடுக்கப்பட்டது. 

இத்திடீர் சோதனையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,  தலைக்கவசம் அணியாது செல்வது,  ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது, மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு, தண்டப்பணம் விதிக்கப்பட்டு, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள் பொலிஸாரால் வழங்கப்பட்டன.

இதன்போது 117 பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .