Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஓகஸ்ட் 09 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, இறக்காமம் பிரதேசத்துக்கான, திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு, ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் இறக்காமம் பிரதேச அமைப்பாளர் கே.எல். சமீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளருக்கு, மகஜரொன்றையும் அவர் இன்று (09) அனுப்பிவைத்தார்.
அனுப்பிவைக்கப்பட்டுள்ள அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இறக்காமம் பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்றும் 2016ஆம் ஆண்டுக்கு முன்னர் இப்பிரதேசத்துக்கென திடீர் மரண விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டிருந்த போதிலும், 2017ஆம் ஆண்டு முதல் திடீர் மரண விசாரணை அதிகாரி இன்றி, இப்பிரதேச மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் அம்மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேசத்தில், ஏற்படும் திடீர் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளைப் பெறுவதில் மக்கள் பல அசௌகரீயங்களை எதிர்கொள்வதுடன், இஸ்லாம் சமயத்தின் அடிப்படையில் குறித்த ஒரு மரணம் இடம்பெற்று 24 மணித்தியாலயத்துக்குள் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும், அடிப்படையில் மரணங்கள் தொடர்பான அறிக்கைகளை, அம்பாறை, உகன ஆகிய பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் சென்று பெறவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பணவிரயம், நேரவிரயம், மொழிப் பிரச்சினை, சமயம் சார்ந்த தெளிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதனால் தனியான திடீர் மரண விசாரணை அதிகாரி ஒருவரை நியமிக்குமாறும் அம்மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago