Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எஸ்.கார்த்திகேசு / 2018 ஏப்ரல் 18 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, திருக்கோவில் அதார வைத்தியசாலையின் வைத்தியர்கள் தங்களின் கடமைகளை மேற்கொள்வதில் சிலர் தடைகள் ஏற்படுத்தும் வகையில், கருத்துக்களை தெரிவித்து வருவதாக கூறி இன்று (18) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு வரும் வெளிநோயாளர்கள் மருத்துவ நிவாரணங்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில், திரும்பிச் செல்வதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, நோயாளிகளின் நலன் கருதி வைத்தியசாலையின் அவசரச் சிகிச்சைப் பிரிவு மற்றும் வைத்தியசாலை விடுதிகளில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ நடவடிக்கைகளை தான் தற்போது முன்னெடுத்து வருவதாகவும் வைத்திய அத்தியட்சகர் பி.மோகனகாந்தன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்களுடன் சந்திப்பு ஒன்றினை மேற்கொள்ளும் வகையில் திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன் தலைமையிலான ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு கல்முனைக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago