2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திறந்த வெளியரங்கு திறந்துவைப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எல்.எம்.ஷினாஸ்

பெரியநீலாவணை, புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலயத்தில் புதிதாய் அமைக்கப்பட்டுள்ள திறந்த வெளியரங்கை திறந்து வைத்து, மாணவர்களின் பாவனைக்கு விடும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எம்.எம்.முஹம்மட் நியாஸ் தலைமையில், பாடசாலை வளாகத்தில் நேற்று (17) நடைபெற்றது.

ஓய்வு பெற்ற முன்னாள் அதிபர் எம்.சி. அஹமட் முகைதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, நாடாவை வெட்டி, அரங்கைத் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில், பாடசாலை சமூகம் சார்பாக, முன்னாள் அதிபர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டார். அத்துடன், கலாசார நிகழ்வுகளும் அரங்கேற்றப்பட்டன.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.உவைஸ், அபிவிருத்தி உத்தியோகத்தர் கலீல் முஸ்தபா, பிரதி அதிபர் எம்.சி.நசார், ஆசிரியர்கள், பெற்றோர் எனப் பலர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X