2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

‘தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்’

எஸ்.கார்த்திகேசு   / 2020 பெப்ரவரி 17 , பி.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது, கல்முனை பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், தற்போது சாய்ந்தமருது பிரதேசம் தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கல்முனை உப தமிழ் பிரதேச செயலகமும் நிச்சயமாக தரம் உயர்த்தப்பட வேண்டுமென்று, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

திருக்கோவில், காயத்தரி கிராமத்தில், நேற்று (16) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, மேற்படி கருத்தை அவர் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “நாட்டில் வாழும் அனைத்துத் தமிழ் மக்களும் இந்த விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இதனால் பாரிய பிரச்சினைகள் உருவாகுவதற்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன” என்றார்.

“நிலைமைகள் இவ்வாறு இருக்கையில் ஜனாதிபதி தீர்வொன்றை வழங்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனவே, இந்தக் கல்முனைப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு, ஒரு தீர்க்கமான முடிவை விரைவாக வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .