Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2021 நவம்பர் 17 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05ஆவது உபவேந்தராக இள வயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டவருமான பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை, அவரது சொந்த ஊர் மக்கள் வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு, சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் நாளை (18) மாலை 3.30க்கு நடைபெறவுள்ளது
முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் தலைமையில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது.
செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனின் நெறிப்படுத்தலில், ஈஸ்டர்ன் காஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட், சம்மாந்துறை நபீர் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபம் ஆகியவற்றின் அனுசரணையில் நிகழ்வு நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருதின் முக்கிய சமூக நிறுவனங்கள் பலதும் கலந்துகொண்டு, பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டிக் கௌரவிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago
8 hours ago