எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 நவம்பர் 20 , பி.ப. 01:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தால் நடத்தப்படுகின்ற 2014/2015, 2015/2016ஆம் கல்வியாண்டுக்கான, கலைமாணி புதிய பாடத்திட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பு முதலாம் பருவ கருத்தரங்குகள், எதிர்வரும் சனிக்கிழமை (24) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தின் உதவிப்பதிவாளர் உமர்பாறூக் இன்று(20) தெரிவித்தார்.
ஏற்கனவே, வழங்கப்பட்ட கால அட்டவணையின்படி கருத்தரங்குகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், மேலதிக விபரங்களுக்கு, 067-2052801 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர், தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி மூடப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 hours ago
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
24 Jan 2026