2025 மே 13, செவ்வாய்க்கிழமை

தெ.கி. பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் 25ஆவது ஆண்டு நிறைவு விழா

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்

தென்கிழக்கு பல்கலைக்கழகக் கலை, கலாசார பீடத்தின்  25ஆம் ஆண்டு ஆண்டு நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும், பல்கலைக்கழகக் கலை கலாசார பீடத்தின் முன்றலில், மாணவ பேரவையின் ஏற்பாட்டில், நேற்று (30) மாலை நடைபெற்றது.

மாணவ பேரவை தலைவர் டி.எம்.ஹிசாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சிறப்பு அதிதிகளாக கலை, கலாசார பீட பீடாதிபதி கலாநிதி ரமீஸ் அபுபக்கர், தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத், முன்னாள் கலை, கலாசார பீட பீடாதிபதி பௌசுள் அமீர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் அரசியல் துறை தலைவர் கலாநிதி எம்.எம். பாஸீல், தென்கிழக்கு பல்கலைகழக வரலாற்றையும் தென்கிழக்கு பல்கலைக்கழக தேவைகள் பற்றியும் உரையாற்றினார்.
 
இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகள்,  கலை, கலாசார பீட பிரிவு தலைவர்கள்,  விரிவுரையாளர்கள், ஓய்வுபெற்ற விரிவுரையாளர்கள், போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்கள் என பலரும் கௌரவிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X