Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை மாவட்டத்தின் மிகவும் பழமை வாய்ந்ததும் அதிக மாணவர்களைக் கொண்டதுமான இறக்காமம் அஷ்ரப் மத்திய கல்லூரியையும் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியையும் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்தும் நடவடிக்கையை, சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் எடுத்துள்ளார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் பூரண ஒத்துழைப்புடனும் வழிகாட்டலுடனும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியமைச்சர் அகிலாவிராஜ் காரியவசம், கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோருடன் இது தொடர்பில் பைசல் காசிம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்தத் தரமுயர்த்தலுக்கு, கிழக்கு மாகாண சபை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தேசிய பாடசாலைகளாக இவற்றைக் கொண்டு நடத்துவதற்கான அனைத்து வளங்களும் உள்ளன என்று, கல்வியமைச்சின் அதிகாரிகளின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
4 hours ago
5 hours ago
7 hours ago